குளவி தாக்குதலுக்கு இலக்காகி 7 பேர் வைத்தியசாலையில்

எல்ல – தெமோதரை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள பாலமொன்றை பார்வையிட்டுக்கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் 7 பேர் மற்றம் பாடசாலை மாணவர் ஆகியோர் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

பாலத்தின் மீது ரயில் பயணித்த நிலையில், அதில் சென்றுக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் சத்திமிட்டுக்கொண்டுச் சென்றதால், பாலத்தில் இருந்த குளவிகள் குழப்பமடைந்து கூட்டைவிட்டு கலைந்துசென்றுள்ளன.

கலைந்து சென்ற குளவிகள் அருகில் இருந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளவி தாக்குதலுக்கு இலக்கான மேலும் சிலர், எல்ல அரச மருந்தகத்தில் சிகிச்சைப் பெற்று சென்றுள்ளதாக எல்ல பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]