குளத்தில் மூழ்கிய நால்வரில் இரு மௌலவி மாணவர்கள் பலி

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்தியாய குளத்தில் மூழ்கிய நால்வரில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை 29.08.2018 நண்பகலளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஏறாவூரைச் சேர்ந்த மௌலவி மாணவர்களான ஸாகிர் (வயது 20) மற்றும் சாதிக்கீன் (வயது 20) ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.

மேலும் இஸ்ஸத் என்ற இன்னொரு மௌலவி மாணவன் கவலைக்கிடமான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

புதன்கிழமை நண்பகலளவில் நண்பர்களான மௌலவி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து உல்லாசமாக ஜெயந்தியாய குளப்பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அதில் நால்வர் அங்குள்ள தோணியொன்றை வலித்துக் கொண்டு குளத்தில் தோணிச் சவாரி செய்துள்ளனர்.

இவ்வேளையில் தோணி உடைந்து கவிழ்ந்து குளத்தில் மூழ்கியுள்ளனர்.

நீரில் மூழ்கிய எவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் ஒருவர் மரக்கட்டையொன்றைப் பற்றிக் கொண்டு கூக்குரலிட்டுள்ளார்.

அவ்வேளையில் அக்கம்பக்கதிலுள்ளவர்கள் ஓடோடிச் சென்று நீரில் மூழ்கியவர்களை மீட்டெடுத்த போதும் அவர்களில் இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்

பலியானவர்களின் சடலம் உடற் கூறாய்வுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியாசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இச்சம்வம்பற்றி வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]