குற்றவியல் விசாரணைகள் அதிகரித்துள்ளது

இலங்கையின் குற்றவியல் விசாரணைகள் கடந்த 2015 – 2016ம் ஆண்டு காலப்பகுதிகளில் 59 சதவீதத்தில் இருந்து 71 சதவீதமாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ப்ரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த கருத்து வெளியிட்டார்.

களுத்துறை சிறைச்சாலை கோரிக்கைக்கு அமைய 32 தடவைகள் சந்தேக நபர்களுக்கான பாதுகாப்பை பொலிஸார் வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் பின்னர் சட்டவிரோதமான முறையில் ஆயதங்களை வைத்திருப்பதும், இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களின் செயற்பாடுகள் இதில் கூடுதல் தாக்கம் செலுத்தியிருக்கின்றதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.