குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நீண்ட நாட்களாக தேடப்பட்டுவந்த இருவரை ஏறாவூர்ப் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஏறாவூர்ப் பொலிஸாருக்கு திங்கட்கிழமை (19) மாலை கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்து ஐயன்கேணி பகுதியில் வைத்து இச்சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஐயன்கேணிப் பகுதியில் சமீப காலமாக வாள் வெட்டு மற்றும் வழிப்பறி போன்ற செயற்படுகள் இடம்பெறுவதாக ஏறாவூர்ப் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த சந்தேக நபரகளை கைதுசெய்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸார் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]