குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி துறக்கத் தயார் : சிறிதரன் சவால்

குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி துறக்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, இலங்கை அரசாங்கத்திற்கு ஜீ.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தவே ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குச் சென்றதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரித்தார்.

இலங்கை நாடாளுமன்றில் உள்ள கணக்காய்வு குழு மற்றும் முறைப்பாட்டு குழு ஆகியவற்றில் அங்கம் வகிக்கிறேன். இந்நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றில் உள்ள குழுக்கள் எப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றன? நடைமுறைகள் என்ன? என்பனபோன்ற விடயங்களை அறிந்து கொள்வதற்கான செயலமர்வுக்காகவே நான் பெல்ஜியம் சென்றிருந்தேன். இதன்போது வெளியே புகைப்படம் எடுத்து கொண்டபோது அதிலே நிர்பந்தத்தின் பெயரிலேயே புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

ஆனால் இங்கே சமூக வலைத்தளங்கள், இணைய தளங்களில் மிக மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இவை எங்கள் மீது கொண்டிருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மட்டுமேயாகும். நான் இலங்கை அர சாங்கத்திற்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்று கொடுப்பதற்காகவே நான் பெல்ஜியம் சென்றேன் எனவும், நான் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மாறாக செயற்பட் டேன் எனவும் எவராவது நிரூபித்தால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று சவால் விடுத்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]