குற்றச்சாட்டு ஓகஸ்ட் 2இல் உரிய பதிலளிப்பேன்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமத்தப்பட்டுள்ள எம்மீதான குற்றச்சாட்டுக்கு ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி உரிய பதிலை அளிப்பேன் என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

குற்றச்சாட்டு ஓகஸ்ட் 2

நேற்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறும் தினம் என்பதால் நான் ஆணைக்குழுமுன் ஆஜராக முடியாது போனது. எந்த விடயத்தையும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்றும் இன்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறியுள்ளார்.

மத்திய வங்கி மோசடியில் சிக்கியிருக்கும் பேர்பச்சுவல் டிரசரீஸ் தனியார் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் ஒரு வாடகை வீடு வழங்கியதாகவும், அதற்கான வாடகைப் பணத்தை அலோசியஸ் செலுத்தியதாகவும் இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]