குறைந்த விலையில் கலப்பட மீன் விற்பனை?

ஹட்டனில் உள்ள மீன் விற்பனை நிலையமொன்றில் குறைந்த விலையில் மீன் விற்பதாக கூறி, பழைய மீன்களைவிற்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

குறித்த மீன் விற்பனை நிலையத்தில் எஞ்சும் மழைய மீன்களை புதிய மீன்களுடன் கலப்படம் செய்து வெள்ளிக்கிழமைகளில் விற்பனை நடைபெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த விலைகளில் மீன்கள் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து பழைய மீன்களை விற்பதால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.