குறைக்கப்படுமா பேரூந்து கட்டணம்?

இன்று பேரூந்து கட்டணம் குறைப்பது தொடர்பாக நிறைவேற்றுக்குழு கூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பேரூந்து கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் எவ்வாறாயினும் ஆரம்ப கட்டணத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதிவேக வீதிகளில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் பயண கட்டணங்களை குறைப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் ஒன்று எட்டப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினம் கூடிய நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போது பேருந்து கட்டணத்தை 2 சதவீதத்தால் குறைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சங்க சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 7 ஆம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடிதன் பின்னர் இறுதி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]