குருக்களுக்கான ஒய்வு விடுதி மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசத்தினால் திறந்து வைக்கப்பட்டது

வளலாய் வடக்கில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசத்தினால் திறந்து வைக்கப்பட்டது.

இத் திறப்பு விழாவிற்கு கடற்படையின் தளபதி ரவீஸ் சின்னையாக கலந்து கொண்டிருந்தார்.

குருக்களுக்கான ஒய்வு விடுதி

குருக்களுக்கான ஒய்வு விடுதி

குருக்களுக்கான ஒய்வு விடுதி
யாழ்மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வடக்கு கடற்படை தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுற்கிணங்க ஆயர் இல்லம் கடற்படைவீரர்களின் பொறியில் பிரிவினரின் மனிதவலுவுடன் கட்டப்பட்டிருந்தது.

15மில்லியன் ரூபா நிதியில் சேர் சிற்றப்லம் கார்டினரின் நிதியத்தின் ஊடாக ஆரம்ப காலப்பகுதியில் 15பரப்பு காணியில் குறித்த ஆயர்கலளுக்கான ஒய்வு விடுதி வளலாய் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.

1950 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணம் றோமன்கத்தோலிக்க திருச்சபையின் பாவணையில் இருந்தது. ஆயருக்கும் சிறப்பாக பெரிய குருமட அருள்சகோதரர்களும் தங்களுக்கு உரிய ஒய்வு விடுமுறை காலங்களில் இங்கு தங்கி செல்லவும் நற்கருணை வழிபாடுகளின் தங்கும் வசதி கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது.

முக்கியமாக ஜெரோம் இமிலியான் பிள்ளை ஆண்டகை ஆயர் மிகவும் அதிகமாக தங்கி சென்ற இடமாக மேற்படி இடம் காணப்பட்டது. கொழும்பு அக்குவனஸ் பல்கலைகழகத்தினை ஆரம்பித்த இமிலியான் பிள்ளை ஆண்டகையின் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி தங்கும் பெரிய குருமட அருட்சகோதரர் தங்களுடைய நீண்டகால விடுமுறையினை இங்கே வந்து சிறப்பாகவும் தனித்துவமாக மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்இ வடக்கு கட்டளைத்தளபதி றியர் அட்மிரல் ஜெயந்த.டி.சில்வாரூபவ் கடற்படை அதிகாரிகள் மற்றும் பங்குத்தந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]