குருகுலராசா இராஜினாமா?

வடமாகாண சபையின்  கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா, தனது இராஜினாமாக் கடிதத்தை கட்சித் தலைமையிடம் இன்றுக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தனக்கு எதிரான ஊழல்- மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில்இ தான் அப்பதவியை இராஜினாமா செய்யப்போவதாகஇ அவரது இராஜினாமாக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவிக்கின்றது.

ஊழல்இ மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை, வடமாகாண சபையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பான விவாதம், நாளை மறுதினம் புதன்கிழமை (14) இடம்பெறவுள்ள நிலையிலேயே குருகுலராசா, தனது பதவியைத் தற்காலிகமாக இராஜினாமா செய்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]