குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 100க்கும் அதிகமான வீடுகள் பாதிப்பு

கொலன்னாவை, மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 100க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இந்த குப்பைமேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குப்பை மேடு சரிந்து
இந்த விடயம் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தி உரிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை குப்பை மேட்டின் மேல் பகுதியில் தீப்பற்றி அதனுள் பெகோ இயந்திரம் ஒன்று சிக்கியுள்ளதுடன், விமானப்படையின் பெல் 212 வகை ஹெலிகப்டர் தீயை அணைப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

குப்பை மேட்டின் சில இடங்களில் தீப்பரவல் இடம்பெறுவதால் தீயணைப்பு படையினர் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், முப்படையினரையும் இணைத்து நிலமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

இது தவிர அவசர தகவல்களை வழங்குவதற்கு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குப்பை மேடு சரிந்து

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]