குப்பை சேகரிக்க யாரும் வரவில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு

கொழும்பு நகரசபை எல்லைக்குள் குப்பை அகற்றும் நடவடிக்கைகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பல நாட்களாக குப்பைகள் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை எனவும் தமது வீடுகளில் குப்பைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தாங்கள் சேகரித்த குப்பைகளை கொண்டுசெல்ல எவரும் வரவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இரவு நேரங்களில் குப்பைகளை சேகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கொழும்பு நகரசபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]