குப்பை கொட்டும் அரசியலுக்கு “குட்பை” சொல்லிவிட்டு பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஆணை தாருங்கள் – நஸீர் அஹமத்

நஸீர் அஹமத்

குப்பை கொட்டும் அரசியலுக்கு “குட்பை” சொல்லிவிட்டு பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஆணை தாருங்கள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத்

கடந்த 30 வருடகாலமாக ஊரில் குப்பை கொட்டிய அரசியலுக்கு “குட்பை” சொல்லி விட்டு பிரதேசத்தை அக்கு வேர் ஆணி வேராக தரம் பிரித்து திட்டமிட்டு அபிவிருத்தி செய்யப் போகும் அரசிலுக்கு ஆணை கோரி நிற்கின்றோம்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்ருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – ஏறாவூர் நகரில் செவ்வாய்க்கிழமை 06.02.2018 இடம்பெற்ற ஏறாவூர் நகரசபையைக் கைப்பற்றும் வியூகத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகப் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், பிரதேச மக்களின் வாக்குகளைப் பெற்று கடந்த 30 வருடங்களாக அரசில் கதிரையில் அமர்ந்த பிரதேச அரசியல்வாதிகள் குறைந்தபட்சம் ஊருக்குள் சேரும் குப்பைகளை திட்டமிட்ட திண்மக் கழிவகற்றல் முறை மூலம் அப்புறப்படுத்தும் நவீன விஞ்ஞான முறைமைகள் தெரியாது ஊருக்குள்ளேயே குப்பையைக் கொட்டினார்கள்.

நான் மாகாண சபை நிருவாகத்தை பொறுப்பெடுக்கும் போது ஏறாவூர் குப்பை நகரமாக உயர்ந்திருந்தது.

உடனடியாகச் செயற்பட்டு ஐநா உதவி அமைப்பின் உதவியைத் துரிதப்படுத்தும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு திண்மக் கழிவகற்றலை மேற்கொண்டு ஊருக்குள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த குப்பை மேட்டை அகற்றினேன்.

இப்பொழுது அழகிய பொழுது போக்கு வாவிக் கரையாகவும் திகழும் அந்த இடம் அந்த இடம் இன்னும் ஒரு சில நாட்களில் கிழக்கு மாகாண சுற்றுலா வழிகாட்டல் மையமாகவும் பல கோடி ரூபாய் செலவில் அழகிய இயற்கை வனப்பாகவும் மாறப்போகிறது.

இது மட்டுமல்ல, பிரதமரிடம் முன் மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள தன்னாமுனை தொடக்கம் சித்தாண்டி வரை உள்ள தமிழ் முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கியதான கழிவு நீர் அகற்றல், மற்றும் வடிகான் அபிவிருத்திக்காக சுமார் 1250 கோடி ரூபாய் செலவிலமைந்த திட்டம் அமுல்படுத்தப்படும்பொழுது மக்கள் சுகாதார நலன்களுடன் வாழ முடியும்.

ஏறாவூர் பெரு நகரம் கிழக்கு மகாணத்தின் அதி நவீன அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளைக் கொண்ட பல கோடி ரூபாய் திட்டத்துடன் இயங்கப் போகின்றது.

மேலும், இலங்iயில் பெண்களுக்கென ஏறாவூரில் உள்ள ஒரேயொரு பெண்கள் சந்தையும் பல கோடி அபிவிருத்தியில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இது இன்னமும் அபிவிருத்தி செய்யப்படவேண்டியுள்ளது.

சுமார் 2500 பேருக்கு மேல் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கக் கூடிய கிழக்கு மாகாண கலாச்சார மண்டபம் எறாவூரில் அமைக்கப்பட்டு வருகின்றது.

அதேபோன்று சகல இன மக்களும் பொருட்கள் கொள்வனவும் விற்பனவும் செய்யும் கேந்திர முக்கியத்தும் வாய்ந்த இடமாகத் திகழும் ஏறாவூரில் சுமார் 250 மில்லியன் ரூபாய் செலவில் நிருமாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாரிய பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை நிறைவு செய்ய வேண்டியுள்ளது.

நஸீர் அஹமத்

சுமார் 450 மில்லியன் செலவில் நிருமாணிக்கப்பட்டுள்ள எறாவூர் நகர சபை நவீன கட்டிடத் தொகுதி,

குறுகிய காலத்திற்குள் சுமார் 2500 வறிய தமிழ் முஸ்லிம் யுவதிகள் தொழில் வாய்ப்புப் பெற்றுள்ள ஏறாவூரின் 3 ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள்.

இன்னமும் மத்திய கிழக்குக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லாமல் உள்ளுரிலேயே பல்லாயிரக் கணக்கானோருக்கு தொழில் வழங்கக் கூடிய தொழில் பேட்டைகள்,

ஏறாவூர் கடல் மற்றும் வாவி மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மீனவர்கள் பல நூறு பேருக்கான நவீன மீன்பிடி அபிவிருத்தி இன்னும் பல்லாயிரக் கணக்கான ஏழை விவசாயிகளின் அபிவிருத்தி என்பனவற்றைச் செய்ய மக்களிடம் ஆணை கேட்டு நிற்கின்றோம்

செய்து முடிக்கப்பட்டவை, ஆரம்பித்து வைக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கும் அபிவிருத்தி, இனிமேல் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி என்பனவற்றைக் கருத்திற் கொண்டு இந்த அரசியல் அதிகார ஆணையைத் தாருங்கள்.

நாம் வெறுமனே வெட்டிப் பேச்சுப் பேசி மக்களை நட்டாற்றில் விட்டவர்களல்லர்.

மக்களை ஏமாற்றி சுகபோகம் அனுபவித்த அரசியல்வாதிகளுக்கு சாவு மணி அடித்து சகவாழ்வுடன் கூடிய அபிவிருத்திக்கு ஆணை கேட்கின்றோம்.

பெப்ரவரி 11ம் திகதி அமையப் போகும் புதிய உள்ளுராட்சி நிருவாகத்திலே நாட்டில் ஸ்ரீலமுகா உயர்ந்த அரசியல் அதிகாரங்களோடு ஆட்சியைக் கைப்பற்றும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]