முகப்பு News குப்பைமேடு அமைப்பதற்கு எதிராக பதுளையில் ஆர்ப்பாட்டம்

குப்பைமேடு அமைப்பதற்கு எதிராக பதுளையில் ஆர்ப்பாட்டம்

குப்பைமேடு அமைப்பதற்கு எதிராக பதுளையில் ஆர்ப்பாட்டம்

வேவெஸ்ஸ தோட்டத்தின் ஒரு பகுதியில் பதுளை பிரதேச சபையினரால் குப்பை மேடு ஒன்றினை அமைப்பதற்காக தோட்ட காணியினை கொடுத்ததற்கெதிராக வேவெஸ்ஸ தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இவ் ஆர்பாட்டமானது பதுளை பிரதேச சபைக்கு முன்னால் இன்றைய தினம் காலையில் இடம்பெற்றது.

குடிநீர் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படும் என கோரிக்கைகளை முன்வைத்துப் பதாதைகளுடன் 500 மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச சபை தலைவர் குப்பை மேடு அமைக்கும் பணியை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக எழுத்து மூலம் தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com