குணரட்னத்துக்கு இலங்கை பிரஜாவுரிமை

முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் குழு தலைவர் குமார் குணரட்னத்துக்கு, இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.


நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இலங்கை குடியுரிமை வழங்குவதாக குடிவரவு, குடியகழ்வு திணைக்கம் அறிவித்துள்ளது. இது குறித்த ஆவணம், குமார் குணரட்னத்துக்கு கிடைத்துள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சி தெரிவித்துள்ளது.