குட்டி போட்ட பூனை போல மனைவி உங்களையே சுத்தி வர வேண்டுமா? – அப்ப இத ட்ரை பண்னுங்க கணவன்மார்களே

* காலையில் கண் விழிக்கும் போதே, படுக்கை அறையில் இருந்தே ரொமான்ஸை தொடங்குங்கள்.

* உங்கள் மனைவி எழுந்திருக்காமல் படுத்துக் கொண்டிருக்கிறாரா? நெற்றியில் முத்தமிட்டு அன்பாய் எழுப்புங்கள்.

* அசதியில் புரண்டு படுக்கிறாரா? அன்றைக்கு நீங்கள் தேநீர் போட்டு கொண்டுபோய் எழுப்புங்கள்.

* கண்ணத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்து எழுப்பி பாருங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் மனைவி ஆசையாய் உங்களை கட்டி அணைத்துக் கொள்வார்.

* சமையல் அறையில் சங்கடத்தோடு சமைத்துக் கொண்டிருக்கிறாரா? மெதுவாய் பின்பக்கம் சென்று இருக்கமாய் அணையுங்கள். மனைவியின் சோர்வுகள் அனைத்தும் பறந்தோடிவிடும். அப்புறம் பாருங்கள் ஆசை ஆசையாய் உங்களுக்கு சமைத்து போடுவார்.

* அலுவலகம் செல்கிறீர்களா? வெறுமனை டாடா காட்டுவதை விட்டு சின்னதாய் முத்தமிட்டு கிளம்புங்கள். அந்த உற்சாகம் மாலை வரை இருக்கும். அலுவலகப் பணிகளிடையே அவ்வப்போது சின்னச் சின்னதாய் ரொமான்ஸ் குறுஞ்செய்தி அனுப்புங்கள். உங்கள் மீதான காதல் அளவில்லாமல் அதிகரிக்கும்.

* மாலையில் வர பிந்துமா? இந்த நேரத்தில் குறுஞ்செய்தி கைகொடுக்காது, மறக்காமல் தொலைபேசி மூலம் தெரிவிங்கள். உங்களின் தகவலோடு முத்தத்தையும் பதிவு செய்யுங்கள். உங்கள் தாமதமான வருகையை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.

* இருவரும் வேலைக்குப் போகும் தம்பதியர் எனில், சின்னச் சின்ன சங்கடங்கள் எழும், இது இயல்பானதுதான். ஆனால், அந்த பிரச்சனையை ஊதி பெரிதாக்குவதும், தண்ணீர் ஊற்றி அணைப்பதும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

* கணவரைவிட மனைவியின் பணி சிரமமானது என்றால், கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போகலாம். பணிச்சுமை தெரியாமல் இருக்க இடைவேளை நேரங்களில் காதல் தகவல்களை குறுஞ்செய்திகளாக தட்டிவிடலாம்.

* தினசரி ஒரேமாதிரியான ஒருவருக்கு மட்டுமே பிடித்தமான உறவுகளில் ஈடுபடாமல் மனைவிக்கு பிடித்தமான முறையில் செயல்படுங்கள். படுக்கை அறையில் யார் ஜெயிப்பது என்பது முக்கியமல்ல, இருவரும் சந்தோசமாக இருக்கிறீர்களா என்பதுதான் முக்கியமான அம்சம்.

* உங்களின் ஒருநாள் விட்டுக் கொடுத்தல் பலநாள் சந்தோசத்திற்கு வழி வகுக்கும். அப்பறம் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]