குடும்ப கஷ்டம் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த செயல்- கண்ணீர் சிந்த வைக்கும் பின்னணி?

25ஆவது வயதில் தற்கொலை எண்ணத்தில் இருந்த ரஹ்மான் அதிலிருந்து மீண்டு தனது உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.

ஆஸ்கார் விருதை பெற்ற ரஹ்மானின் வாழ்க்கையை நோட்ஸ் ஆப் எ ட்ரீம் என்ற பெயரில் கிருஷ்ணா திரிலோக் என்பவர் சுயசரிதையாக எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தின் வெளியீடு மும்பையில் நடந்தது. ரஹ்மான் தனது சிறுவயது வாழ்க்கை, இளமை பருவம், சினிமா அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் இதில் ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

இளமை கால வாழ்க்கையில் கஷ்டங்கள் காணப்பட்டது. எனக்கு 9 வயது இருந்தபோது தந்தை இறந்துவிட்டார். அதனால் வாழ்க்கையே வெறுமையாகிவிட்டதாக நினைத்தேன்.

பின்னர் இசைக்கருவிகளை வாடகைக்கு கொடுத்து அதில் வந்த சொற்ப பணத்தை வைத்து குடும்பம் நடத்தும் நிலை இருந்ததால் தன்னுடைய 25-ஆவது வயதில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்தேன்.

ஆனால் அதுவே எனக்கு மிகுந்த தைரியத்தை கொடுத்தது. மரணம் என்பது அனைவருக்கும் நிரந்தரம். ஒவ்வொருவருக்கும் காலாவதி நாள் குறிக்கப்பட்டு இருக்கும் போது நான் ஏன் அஞ்ச வேண்டும்? என்ற உறுதி ஏற்பட்டது.

ரோஜா படத்துக்கு இசையமைக்க எனக்கு வாய்ப்பு கிடைப்பது வரை விரக்தியாகவே இருந்தேன். அதற்கு முன்பாகவே நான் முஸ்லிம் மதத்துக்கு மாறினேன்.

எனது நிஜ பெயரான திலீப்குமார் என்பதை, ஏ.ஆர்.ரகுமான் என்று மாற்றினேன். திலீப்குமார் பெயர் எனக்கு பிடிக்காமல் போனது.

அந்த பெயரையே வெறுத்தேன். அது ஏன்? என்று புரியவில்லை. பெயரை மாற்றிய பிறகு புது மனிதனாக மாற நினைத்தேன். முழுமையாக என்னை மாற்றினேன்.

பழைய வி‌ஷயங்களில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார். இது ரசிகர்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்கொலை எண்ணத்தில் இருந்த சாதாரண ரஹ்மான் இன்று இசைப்புயலாக, ஆஸ்கார் நாயகனாக விஸ்வரூபம் எடுத்துள்ளது அவரது உழைப்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி ஆகியவற்றையே காட்டுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]