குடும்பஸ்தர் கொலை: இருவருக்கு விளக்கமறியல்

குடும்பஸ்தர் கொலை: இருவருக்கு விளக்கமறியல்

அக்கரபத்தனை – ஊட்டுவள்ளி தோட்டத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இருவர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலிய நீதவான் நீதிமன்ற நீதிபதி ருவான் இந்திக்க டி சில்வா இதற்கான உத்தவை பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த வெள்ளிக்கிழமை 36 வயதுடைய குறித்த குடும்பஸ்தர் ஒருவர் வறுமை காரணமாக தனது மனைவி மற்றும் பிள்ளைகளை நஞ்சு அருந்தி தன்னுடன் சேர்ந்து தற்கொலை செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.

அதன்காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டால் மனைவியுடன் கைகப்பில் ஈடுபட்ட அவர், அயல் வீட்டிலிருந்த உறவினரினால் தாக்கப்பட்ட நிலையில், பலியாகியுள்ளார்.

இந்த தகவல் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களே தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]