குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) மாலை குடும்பஸ்தரெருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ள ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பு சம்பந்தர் வீதியைச் சேர்ந்த மேகராசா யோகராசா (வயது 26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நான்கு நுண்கடன் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக மேலும் ஒரு நுண்கடன் நிறுவனத்தில் கடன் பெற்றுத்தருமாறு மனைவியிடம் கோரியுள்ளார் இனிமேல் கடன் பெற முடியாது என மனைவி மறுப்பு தெரிவித்தமையினால் மனையியுடன் சண்டையிட்டு கோபத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் உடற்கூறாய்வுக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info[email protected]