குடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு

இலங்கை குண்டு வெடிதாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் இலங்கையரின் உருக்கமான பதிவு இதுவாகும்.வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”இங்கிலாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம் சொல்லிச்சென்றேன் உங்கள் நாட்டை பார்க்க போகிறேன் என்று. குடும்பத்துடன் சென்றேன் தனிமையில் வருகிறேன்.

என் மனதும் என் நினைவும் அவர்களாகவே இருக்கபோகிறது. இலங்கை வரும்போது விமான இருக்கை அருகே இன்பத்துடன் இருந்து கதைத்தவர்கள், இங்கிலாந்து திரும்பும் போது விமான இருக்கை வெறுமனே இருக்க வேதனைப்பட போகிறேன்….

என் நிலை அறிந்த சகோதரர்கள், நண்பர்கள் பெற்றோர்கள், விமானநிலையத்தில் காத்திருக்க அவர்களுக்கு என்ன சொல்வேன்! வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே…!மனைவியின் அன்பு என்னை அழைக்காது, பிள்ளைகளின் பாசம் என்னை அழைக்காது, என் தனிமை மட்டும் அவர்களின் அனைத்திலும் சிந்திக் கிடக்கப் போகிறதே.

என் பிள்ளைகளின் பள்ளி நண்பர்களுக்கு என் மனைவியின் சக தோழிகளுக்கு என்ன சொல்லப்போகிறேன்.இனிவரும் காலத்தில், என் உயிர்களின் நினைவையும், அதன் வேதனையையும் மறக்க என் இருப்பிடத்தை மாற்றினாலும், அவர்கள் இறந்த இடத்தை நான் மறவேன்… என உருக்கமாக வெளியிட்டுள்ளார்.

குடும்பத்தை குடும்பத்தை குடும்பத்தை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]