குடும்பத்தலைவரைக் கொலை செய்த 2 பிள்ளைகளின் தந்தைக்குத் தூக்கு

யாழ்,குடும்பத்தலைவரைக் கொலை செய்த 2 பிள்ளைகளின் தந்தைக்குத் தூக்கு

கொலை செய்த

கிளிநொச்சியில் குடும்பத்தலைவர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்கு 2 பிள்ளைகளின் தந்தைக்கு தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

2010ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி கிளிநொச்சியில் வேலுப்பிள்ளை சிவரூபன் என்பவர் போத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் கல்லுக்கட்டில் கிணற்றில் போடப்பட்டிருந்தது.

இந்தக் கொலையைச் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் கரிகரன், தங்கராஜா இராஜேந்திரன் அல்லது ராசா ஆகிய இருவரும் மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவருக்கும் எதிராக கிளிநொச்சி நீதிவான் மன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. அதன் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வேலுப்பிள்ளை சிவரூபனை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் எதிகள் இருவருக்கு எதிராகவும் தண்டனைச் சட்டக் கோவை 296ஆம் பிரிவின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2011ஆம் ஆண்டு பெப்ரெவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (07.12) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இரண்டாம் எதிரி மீதான குற்றச்சாட்டை வழக்குத் தொடுனரால் நீருபிக்கமுடியவில்லை. அதனால் இரண்டாம் எதிரியை மேல் நீதிமன்றம் விடுவித்தது.

முதலாம் எதிரி மீதான குற்றம் கண்கண்ட சாட்சிகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படாவிடினும் சந்தர்ப்ப சூழல் சாட்சியங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனால் கொலை செய்யும்போது நோக்கோடு வேலுப்பிள்ளை சசிரூபனை கொலை செய்தார் என இனங்கண்டு முதலாம் எதிரியைக் குற்றவாளியாக நீதிமன்று அறிவிக்கிறது” என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

கொலைக் குற்றத்துக்காக ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில் நிர்ணயிக்கப்படும் இடத்தில் குற்றவாளியின் உயிர் பிரியும்வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று பரிந்துரைக்கிறது” என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் நெறிப்படுத்தினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]