குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் புதிய வேலைத்திட்டம்

மனித வியாபாரத்தில் ஈடுபடுகின்றவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருவதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்தார்.

துறைமுகம், வானூர்தி, சுங்க மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பனவற்றை இணைத்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிறுவனங்களை இணைத்து புதிய வியூகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆண்டில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]