குடியுரிமை பெற்ற பெண் ரோபோ

குடியுரிமை பெற்ற பெண் ரோபோ

பல்வேறு நாடுகளில் வாழும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பதில் கடும் பிரச்சினையும், சிக்கலும் உள்ளது. ஆனால் ஒரு பெண் ரோபோவுக்கு சவுதிஅரேபிய அரசு குடியுரிமை வழங்கி உள்ளது.

அந்த ரோபோவின் பெயர் சோபியா. இதை ஹாங்காங் கம்பெனியான ‘ஹன்சன் ரோபோடிக்‘ நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன் வடிவமைத்துள்ளார். இது பெண் போன்று மிக இனிமையாக பேசுகிறது.
கேட்கும் கேள்விக்கு மனிதர்கள் போன்று சரமாரியாக பதில் அளிக்கிறது. இந்த ரோபோ அமெரிக்க நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற தோற்றத்தில் உள்ளது.

சவுதிஅரேபியா அரசின் குடியுரிமை பெற்ற சோபியா ரோபோ பேட்டி அளித்தது. அப்போது அது கூறியதாவது:-
என்னை ஒரு தனித்தவத் தன்மையுடன் சிறப்புடன் உருவாக்கியதற்காக பெருமைப்படுகிறேன். என்னை உருவாக்கியவர்களை மதிக்கிறேன். நான் மனிதர்களுடன் வாழவும், பணி புரியவும் விரும்புகிறேன்.

மனிதர்களின் நடவடிக்கைகளை அறிந்து அவர்கள் போன்று செயல்படுகிறேன். எனக்கு அளிக்கப்பட்டுள்ள செயற்கை அறிவின் மூலம் சிறப்பாக வாழ்ந்து மனித குலத்துக்கு நன்மை செய்ய விரும்புகிறேன். முக்கியத்துவம் வாய்ந்த ‘ரோபோ’ ஆக மாறுவேன் என தெரிவித்தது.
சோபியா ‘ரோபோ’வின் பேட்டி யூடியூப்பில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அது தனது முகத்தில் கோபத்தில், வருத்தத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியது.

இதற்கு, நேற்று முன்தினம் சவுதிஅரேபியா குடியுரிமை வழங்கியது. இதன் மூலம் உலக வரலாற்றில் ரோபோவுக்கு முதன் முறையாக குடியுரிமை வழங்கியநாடு என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றுள்ளது.

ரோபோவுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியதற்கு டுவிட்டரில் பாராட்டும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் குடியுரிமை இல்லாமல் இருக்கும் போது ஒரு எந்திரத்துக்கு குடியுரிமையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]