குடிப்பதற்கு பணம் தர மறுத்தற்கு ஆத்திரத்தில் 4 மாத குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த தந்தை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகிலுள்ள கோட்டக்குப்பம் கிராமத்தை சார்ந்தவர் மதியழகன் (30)., இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தை சார்ந்தவர் பொன்னி (24).

இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக காதலித்து திருமணமும் செய்து கொண்டு தற்போது இரண்டரை வயதுடைய பிரதீப் ராஜ் என்ற மகனும், பிறந்து நான்கு மாதங்கள் ஆன பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில்., மது பழக்கத்திற்கு ஆளான மதியழகன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த தகராறு செய்யும் வழக்கத்தை வைத்துள்ளார்.

இதன் காரணமாக சில நாட்கள் வேலைக்கு செல்வதும், சில நாட்கள் வீட்டில் படுத்துறங்கும் பழக்கத்தை வைத்துள்ளார். இதன் கரமாக இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த சமயத்தில், கடந்த மூன்று நாட்களாக பொங்கல் பண்டிகை என்பதன் காரணமாக மதியழகன் பணிக்கு செல்லவில்லை, நேற்று இரவு இல்லத்திற்கு வந்த மதியழகனிற்கும் – பொன்னிக்கும் இடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மதியழகன் தொட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்த குழந்தை மீராவை சுவற்றில் ஓங்கி அடித்தார்.

குழந்தையை சுவற்றில் அடித்தவுடன் குழந்தையின் தலையில் இருந்து இரத்தம் ஒழுகவே., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மதியழகன் வீட்டில் இருந்து தப்பியோடினர், இந்நிலையில், உயிருக்கு போராடிய குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்த பொன்னி மற்றும் அவரது உறவினர்கள், குழந்தையை மருத்துவர்கள் சோதித்த பின்னர், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்ட பொன்னி மற்றும் அவரது உறவினர்கள் கதறியளவே, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையில்., காணும் பொங்கலன்று நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த விரும்பி., மனைவியிடம் சென்று பணம் கேட்டேன், மனைவி பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் குழந்தையை தூக்கி சுவற்றில் வீசினேன். இரத்த வெள்ளத்தில் துடித்த குழந்தையை கண்டு அதிர்ச்சிடைந்து அங்கிருந்து தப்பி சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]