குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் பீலி கரையில் காத்திருக்கும் ஹோல்றீம் கொணன் தோட்ட மக்கள்

லிந்துலை ஹோல்றீம் கொணன் தோட்டப்பரிவில் சுமார் 185 இற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தோட்ட மக்கள் சுத்தமான குடி தண்ணீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பல சிரமங்களை நாளாந்தம் எதிர்நோக்கி வருவதாக புலம்புகின்றனர்.
மலையக அரசியல் வாதிகள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு எங்களுடையத் தேவைகளை பூர்த்திசெய்யவில்லையென இத்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 12 வருடங்களாக சுத்தமான குடி தண்ணீருக்காக ஏங்கும் இம்மக்கள் இன்றும் விடிவுக்காக பீலி கரையில் காத்திருப்பதாக கவலை அடைகின்றனர். சுத்தமான குடி தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் இவர்கள் அதிகாலை 5 மணிமுதல் 7 மணிவரை தண்ணீர்க்காக காத்தியிருக்கின்றனர்.
இதனால் தோட்ட தொழிலுக்கு நேரத்துடன் செல்லமுடியாமலும், மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாமலும் அல்லல் படுகின்றனர். காலை நேரத்தில் சாப்பிடகூட முடியாத நிலையில் பட்டினியாக தொழிலுக்குச் செல்லவேண்டிய நிலையும் இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையகம் என்றாலே இயற்கை வளங்கள் கொட்டிகிடக்கும் ஒரு பிரதேசமாகும். இதில் மிக முக்கியமான வளம் தான் நீர் வளம். எங்குப்பார்த்தாளும் குளங்கள், நீர் ஓடைகள், ஊற்று நீர் என இயற்கையாக காணப்படுகின்றது.

இவ்வாறு மலையகத்தில் நீர் வளங்கள் இருக்கின்ற போதிலும் இன்னும் இந்த மக்கள் சுத்தமான தண்ணீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இலங்கையில் நீர் பாசனை அமைச்சு தனியாக இருக்கின்ற போதிலும் இந்த அமைச்சின் செயல்பாடுகள் மலையக மக்களுக்கு எட்டா கனியாகவே உள்ளது. இலங்கையை பொருத்தவரையில் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு அமைச்சின் நடவடிக்கைகள் கணிசமான அளவு நடைபெறுவதை நாம் உணரமுடியும். பெருந்தோட்டத்தினை பொருத்தவரையில் நாட்டிற்கு உழைத்து உழைத்து தேய்ந்துபோன இச்சமூகம் பருகும் ஒரு கோப்பை குடிதணீர் கூட அசுத்தமாகவே உள்ளது.

இன்று எத்தனையோ தோட்டங்களில் வாழும் மக்கள் குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன், ஓரு குடம் நீர்க்காக ஒரு குழாயிலிருந்து வரும் நீருக்காக அடுக்கடுக்காக குடங்களையும், பிளாஸ்டிக் கேன்களையும் வைத்துவிட்டு பல மணிநேரம் காத்திருப்பது வேதனை தரும் விடயமாகும்.

இந்த மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]