குடிநீர் நெருக்கடி காரணமாக வீதியில் நேராகபடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தாய்- கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள்

அம்பாறை, உஹன பிரதான வீதியின் மங்களகம, நுவரகலதென்ன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடி காரணமாக அந்த பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் இதனை கண்டுகொள்வதாக இல்லை என்பதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சினையை தாங்கி கொள்ள முடியாத, தாய் ஒருவர் வீதியில் நேராக படுத்து குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

இந்த சோக சம்பவத்தை பார்த்த தேரர் ஒருவர் அதனை வீடியோவாக பதிவிட்டு பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குடிக்க நீர் இன்றி வீதியில் கதறும் இந்த தாயின் நிலைமை அரசியல்வாதிகள் கண்டுகொள்வதில்லை என பலர் கோபத்தை வெளியிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]