குடிநீர் குழாய் பொருத்தல் அகழ்வு பணி

கொட்டாஞ்சேனை – அளுத்மாவத்தை – ஹெட்டியாவத்தை சந்தி முதல் ராமநாதன் மாவத்தை வரையான பகுதியில் குடிநீர் குழாய் பொருத்தல் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்காரணமாக குறித்த பகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதற்கமைய இன்று முதல் ஒக்டோபர் மாதம் 9 திகதி வரை நாளாந்தம் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை ஐந்து மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியினுள் மாற்று வழிகளை உபயோகிக்குமாறு காவற்துறையினர் வாகன சாரதிகளை கோரியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]