குடிக்க பணம் தர மறுத்த தாய் – பெட்ரோல் ஊற்றி தீயிட்ட மகன்!

இந்தியா பெங்களூரில் மது அருந்த பணம் கொடுக்காததால் பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி தீயிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு சதாசிவநகர் பகுதியை சேர்ந்தவர் உத்தம் குமார்(20). இவருக்கு மதுபழக்கம் இருந்துள்ளது. இதனால் தாயிடம் அடிகடி பணம் கேட்பது வழக்கம்.

குறித்த தினத்தன்று தாயிடம் பணம் கேட்க அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. . ஒரு கட்டத்தில் தாயின் மீது பெட்ரோலை ஊற்றி தீயிட்டுள்ளான்.

இதன் போது குறித்த இளைஞனின் தந்தை அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்தம் குமார் தப்பி சென்றுள்ளார். இவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]