கிழக்கு மாகாண ஆளுனராக றோகித போகொல்லாகம நியமனம்

கிழக்கு மாகாண ஆளுனராக றோகித போகொல்லாகம நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுனராக ஒஸ்ரின் பெர்னான்டோ இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவவின் பிரத்தியோக செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்தே றோகித போகொல்லாகம கிழக்கின் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

2001ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்த றோகித போகொல்லாகம பின்னர், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில், 2007 தொடக்கம் 2010 வரை வெளிவிவகார அமைச்சராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]