கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் – பிரதம மந்திரி ரணில்

ரணில்

கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் – பிரதம மந்திரி ரணில்

கிழக்கு மாகாணம் 1984ஆம் ஆண்டுக்கு பின்னர் யுத்தத சூழ்நிலை காரணமாக அபிவிருத்தியில் பின்னோக்கி காணப்பட்டது அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ளோம் என பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலுள்ள ஐயங்கேணியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

ஐக்கிய தேசிய கட்சியின் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கான தலைமை வேட்பாளர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடரந்து உரையாற்றுகையில் –

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்பு சிங்க, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நாட்டில் ஒற்றுமையாக வாழக்கூடிய நிலை ஏற்பட்டது. ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்களை பொது எதிரணி வேட்பாளராக நிறுத்தி அனைத்துக் கடசிகளையும் ஒன்றிணைத்து செயற்பட்டோம்.

அதன் பின்னர் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற ரீதியில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி செய்கிறோம். தந்போது நாட்டில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பியிருந்தோம்.

தமிழ் – முஸ்லிம் மக்களிடையே காணப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் தற்போது வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இன்று அச்சம் அன்றி வாழக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இலங்கையர் என்ற அடையாளம் வலுப்படுத்தபடுகிறது.

நங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்கும் போது பொருளாதாரம் மோசமாக காணப்பட்டது. அரசாங்கத்திடம் நிதி இருக்கவில்லை கடன்களைச் செலுத்துவதற்காக வருமானம் குறைவாக காணப்பட்டது. இன்று பொருளாதாரத்தை வலுப்படுதியுள்ளோம். அரச வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 15 மில்லியன் டொலருக்கு அதிகமான ஏற்றுமதிவருமானம் கிடைத்தது. வெளிநாட்டு வருமானமாக அதிகமாக காணப்பட்டது.

கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோடை போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய கைத்தொழில் சாலைகளை அமைத்து வெளிநாட்டு முதலீடு கிடைப்பதற்றான செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் அதிகம் பாதிப்படைந்திருந்தது அந்த பிரதேசங்களின் பொருளாதாரம் அபிவிருத்தி கண்டுவருகின்றன. கொழும்பு ஹம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு அப்பால் கைத்தொழில் பேட்டை என்ற அடிப்படையில் துறைமுக அபிவிருத்தியில் திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்.

திருகோணமலை தொடக்கம் அறுகம்பை வரை உல்லாசப் பயணத்துறைக்காக அபிவிருத்தி செய்யவுள்ளோம் பசிக்குடா உட்பட பல பிரதேசங்கள் அபிவிருத்தியடையும். விவசாயம் கால்நடைகளை அபிவிருத்தி செய்யவுள்ளோம்

1984ம் ஆண்டுகளுக்குப் பின் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி கண்டிருக்க வில்லை இந்த பிரதேசங்களை முன்னேற்ற வேண்டிய தேவை உள்ளது. இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அனைவரும் அரச தொழில் புரியும் நிலைமை ஏற்படுத்தப்படும்.

பல்கலைக் கழக பட்டம் பெற்றவர்களுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கப்படும். ஆசிரியர் நியமனம் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.எதிர் காலத்தில் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.

செங்கலடி பிரதேசதில் வீடு, சுத்தமான குடிநீர், பாதை, விளையாட்டு மைதான, என பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களியுங்கள். பிரதேச சபையினை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றும் சந்தர்ப்பத்தில் இந்த பிரச்சினையை எங்களால் தீர்த்துவைக்க முடியும். யுத்தத்தினால் பாதிக்கப்ட்ட பெண்கள் கண்ணீருடன் இருக்கின்றார்கள் அவர்களுக்கு விடுவுகாலத்தை தேடிக்கொடுக்க வேண்டும்.

காணமல் போனவர்களது குடும்பங்கள் காணப்படுகின்ற காணாமல் போனோருக்கான அலுவலகத்தை ஆரம்பித்து அவர்களுக்கான குழுவினை நியமித்து அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.

அபிவிருத்தியை ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டுவருவது எமது நோக்கமாகும். நாங்கள் மனசாட்சிக்கு வேலை செய்ய வேண்டும். நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில் செயற்படுகிறோம்.

செங்கலடி பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய எண்ணம் எங்களிடம் காணப்படுகிறது. தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செங்கலடி பிரதேச சபையினை அபிவிருத்திக்காக ஐக்கிய தேசிய கட்சிக்குப் பெற்றுத்தாருங்கள்.

இந்த பிரதேச மக்களுக்கு விடிவினைப் பெற்றுத்தர நாங்கள் இங்கு வந்துள்ளோம். இந்த அரசாங்களத்தின் பலத்தினை உங்களுக்கு தரவேண்டுமாகவிருந்தால் ஐக்கிய தேசிய கட்சிகளுக்கு வாக்களியுங்கள்” என்றார்.

ரணில் ரணில் ரணில் ரணில் ரணில் ரணில் ரணில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]