கிழக்கு மாகாணத்தில் நிலவும் வலயக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்கம்

இலங்கை ஆசிரியர் சங்கம்

கிழக்கு மாகாணத்தில் நிலவும் வலயக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்கம்.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைப் பிரமாணக் குறிப்புகளுக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் நிலவும் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்படல் வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதரூபன் திங்கட்கிழமை 26.03.2018 வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிழக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள கல்வி வலயங்களின் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் உயர்சட்ட நியாதிக்கங்களுடன் வெளிப்படைத் தன்மையாக நியமிப்புச் செய்வதற்கு மாகாணக் கல்விச் செயலாளர் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

இலங்கை ஆசிரியர் சங்கம்

இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு வெளிப்படைத்தன்மையாக விண்ணப்பம் கோராமல் கிழக்குமாகாண தாபன விதிக்கோவைக்கு அமைவாக இலங்கை கல்வி நிர்வாக சேவை வகுப்பு 2 அதிகாரிகளை நியமிப்பதற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் மாகாணக் கல்விச் செயலாளரைக் கேட்டுள்ளமை சேவைப் பிரமாணக் குறிப்பின் ஆட்சேர்ப்பு சட்ட விதிக்கு முற்றிலும் முரணானது.

மட்டக்களப்பு மத்தி, கிண்ணியா, அக்கரைப்பற்று கல்வி வலயங்களில் கல்விப் பணிப்பாளர்களின் வெற்றிடங்கள் வகுப்பு 1ஐச் சேர்ந்த சிரேஷ்ட ஆளணியினரால் நிரப்பப்படுவதற்கும் அவ் ஆளணி பற்றாக்குறை காணப்படும்பட்சத்தில் வகுப்பு 2ஐச் சேர்ந்த பொது ஆளணியினரை பதில் கல்விப் பணிப்பாளர்களாக நியமிப்புச் செய்வதற்கு கல்விச் செயலாளர் வெளிப்படைத் தன்மையாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

இலங்கை சனநாயக சோஷலிஸக் குடியரசின் அதிவிஷேட வர்த்தமானிப் பத்திரிகை 1589ஃ30 இல் குறிப்பிடப்பட்டுள்ளதும் தாபன விதிக்கோவை அத்தியாயம் 2இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்சேர்ப்புத் திட்டங்களுக்கும் நியமிப்புக்களுக்கும் கிழக்கு மாகாண தாபன விதிக்கோவை முரணாக காணப்படுகிறது.

மேலும் 2017.04.11 திகதியிடப்பட்டதும் 2014ஃ3 ஆம் இலக்க இலங்கை சனநாயக சோஷலிஸக் குடியரசின் வர்த்தமானிப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் மாகாணப் பிரதம செயலாளருக்கு அதிகாரங்கள் கையளிக்கப்பட்டு கல்விச் சேவை குழுவின் சேவைப் பிரமாணக் குறிப்புக்கள் மாகாணக் கல்விச் செயலாளரினால் பொறுப்புக் கூறலுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாகாணக் கல்வித் திணைக்களத்தில் விN;ஷட ஆளணியினரின் பாடத்துறைக்குரிய கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் கல்வி நிர்வாக சேவை ஆகிய பதவிகளுக்கு மாகாணத்தில் ஏராளமான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் சில கல்வி வலங்களில் மேலதிக ஆளணியினரும் உள்ளார்கள். இது முரண்பாடாக உள்ளது.

விஷேட பாடத்துக்குரிய கல்வி நிர்வாக சேவையின் விசேட ஆளணியினரின் மனித வள உச்சப் பயன் வீண் விரயம் செய்யப்படுவதையும் இந்த நிலைப்பாட்டைப் பற்றி நிருவாகம் அக்கறை கொள்ளாதிருப்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் மனித வளங்கள் அதன் உச்சப்பயன்களைப் பெற்றுக் கொள்ளா நிலையில் வீண் விரயம் செய்யப்படுவதால் தேசிய ரீதியில் கல்வி நிலையில் கிழக்கு மாகாணம் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]