கிழக்கு மாகாணத்தில் அதி நவீன வசதிகளுடனான தனியார் வைத்தியசாலை அமைக்க கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் அதி நவீன வசதிகளுடனான தனியார் வைத்தியசாலை அமைப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று தென்னி;ந்திய தனியார் வைத்தியசாலை அதிகரிகளுடன் நடாத்தப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸிர் அஹமத் தெரிவித்தார்.
தொழிலதிபரான முன்னாள் முதலமைச்சரின் கொழும்பு அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை புதன்கிழமை 23.05.2018 இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாணத்தில்
இதில் தென்னிந்திய கோயம்புத்தூர் ஸ்ரீ இராமகிருஷ்ணா வைத்தியசாலையின் பணிப்பாளர் மெரீபல் பாலசிங்கம் (ஆநசipயட டீயடயளiபொயஅ – னுசைநஉவழச.) உட்பட வைத்தியத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் புதிய வைத்தியசாலை அமைப்பது பற்றிய முழுத்திட்டங்களையும் வரைந்துள்ளதாகவும் அது குறித்து மேற்கொண்டு சாத்தியப்பாடான பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் அவர்கள் இதன்போது கருத்தத் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல வசதிகளுடனான தனியார் வைத்தியசாலை அமைவது கொழும்புக்கு அல்லது இந்தியாவுக்குச் சிகிச்சைக்குச் செல்லும் சிரமத்தை வெகுவாகக் குறைக்கும் என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத் இக்கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.

பல மில்லியன் ரூபாய்கள்முதலீடடில் மேற்கொள்ளப்படப் போகும் உத்தேச திட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஏராளமானோர் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ளவும் சுகாதாரத் துறையை மேம்பட வைக்கவும் வழியெற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]