கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் கட்சிகள் ஒன்றுசேருமாறு அறைகூவல்

தமிழ் கட்சிகள்

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் மாத்திரமே தமிழர் ஒருவரை முதலமைச்சராக கொண்டுவர முடியும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில்; நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஆதரவாளர் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிபட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழ்கட்சிகள் கூட்டுச்சேர்ந்தால் மாத்திரமே தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரமுடியும். இதனூடாக தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவும் முடியும். இது சாத்தியப்படாத பட்சத்தில் தமிழ் கட்சிகளுக்குள் மாவட்ட ரீதியான போட்டித் தவிர்ப்பை தமிழ்த் தலைமைகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.இதைமீறி ஏட்டிக்குப்போட்டியாக முரண்பாடுகளை தோற்றுவித்து பகைமையைக் காட்டி தேர்தலில் போட்டியிடுவார்களேயானால் கிழக்கமாகாணத் தமிழர்களுக்கு தமிழ்த்தலைமைகள் துரோகம் விளைவித்தவர்களாக வரலாறு எழுதவேண்டி ஏற்படும்

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் 1983ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டுவரையில் அண்ணளவாக 27வருடங்கள் வடக்கு, கிழக்கில் ஜனநாயக தேர்தல் அமுலில் இருந்ததா? என்னும் கேள்விக்கு மத்தியில் வடகிழக்கு மக்கள் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததை யாரும் மறுதழிக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழலில் 2010ம்ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதிற்குப் பின் துப்பாக்கிகளின் சத்தம் ஓய்ந்த நிலையில் வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வன்முறைத் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதன் காரணமாக வடகிழக்கில் தேர்தலில் ஊடாக போட்டியிடுவதற்கு பலர் முன்வந்துள்ளனர்.

இதற்கு முன்ணுதாரணமாக இறுதியாக நடைபெற்ற உள்ள+ராட்சிசபைத் தேர்தல் சான்று பகிக்கின்றது. மேலும் எதிர்வருகின்ற மாகாணசபைத் தேர்தலிலும் தனிநபர் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பலர் போட்டியிடுவதற்கு தயாரான நிலையில் உள்ளனர்.

தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக போட்டித்தன்மை அதிகரிப்பதால் வாக்கெடுப்பு வீதமும் செயற்திறனும் அதிகரிக்கப்படும். ஆனால் வாக்குகள் பிரிந்து போகும். வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வாக்குகள் பிரிவதால் பெரிய பாதிப்பு ஏற்படாது காரணம் அனைவரும் தமிழர்களே!

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வாக்குகள் பிரிவதால் அது ஏனைய இனங்களுக்கு சார்பாக மாறுவதோடு, தமிழர்களுக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்-23வீதம் முஸ்லிம்-37வீதம் தமிழர்-40வீதம் உள்ளதே இதற்கு காரணமாகும். இத்தோடு கிழக்கு மாகாணத்திலுள்ள 40வீதமான தமிழர்களில் ஆகக்கூடியது 20வீதமான தமிழர்களே வாக்களித்து பழக்கப்பட்டவர்கள்.

கிட்டத்தட்ட 50வீதமே வாக்களிக்கப்படும். அளிக்கப்படுகின்ற 50வீதமான வாக்குகளை சிதறடிப்பதற்காக கிழக்கமாகாணத்தில் தேசியஇனவாதக்கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்தும் அற்பசொற்ப சலுகைகளுக்காக தமிழர்களின் வாக்ககளை பிரித்து ஏனைய இனத்தவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 25ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் வாக்குகளைப் பிரிப்பதற்கு ஒருசில தமிழர்களுடாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஒருசில தமிழர்களை தேர்தலில் போட்டியிடுமாறு வாக்கை பிரிப்பதற்கான சதிவேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தமிழ்கட்சிகளும் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டால் இறுதியான கிழக்கு மாகாணசபையில் 37 மொத்தஉறுப்பினர்களில் 2012ம் ஆண்டு தமிழ் மக்களின் வாக்களிப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 12 தமிழ் உறுப்பினர்கள்,15முஸ்லிம் உறுப்பினர்கள், 10சிங்கள உறுப்பினர்கள். இந்த பிரதிநிதித்துவ எண்ணிக்கை 2016-2017ம் ஆண்டுகளில் ஏனைய இனத்தவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்றதாலும்,இராஜினாமா செய்ததாலும் இறுதிக்கட்டத்தில் இரண்டு தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

தமிழர்கள் பிரிந்து கேட்கும் பட்சத்தில் சின்னாபின்னமாக்கப்பட்டு குறைந்தது மூன்று,நான்கு பிரதிநிதித்துவம் வருவதோடு நான்கு தமிழ்பிரதிநிதித்துவம் மூன்று மாவட்டங்களிலும் ஏனைய முஸ்லிம், சிங்கள இனத்திற்கு செல்லக்கூடிய சூழல் உருவாகும் என்பதை தமிழ்தலைமைகள் மறந்துவிடக் கூடாது.

தேர்தல் ஆணையாளரைப் பொறுத்தவரையில் எந்த தனிஒரு கட்சிக்குஆகக் கூடிய ஆசனம் உள்ளதோ அந்தக்கட்சியே ஆட்சி அமைப்பதற்கு தேர்தல் ஆணையாளர் அவர்கள் அழைப்பு விடுவது சட்டதிட்டமாகும்.

குறிப்பாக, கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள் கடந்த முப்பது வருடகால கட்டத்திற்குள் சட்டரீதியான அரசியல் அதிகாரமின்றி ஏனைய இனங்களின் இனவாத அபிவிருத்தியில் பாதிக்கப்பட்டு விரக்தி அடைந்து அனாதைப்பிணங்களாக துவண்டு கிடக்கும் நிலையில் கிழக்கு மாகாணம் ஊடாக 40வீதமாக உள்ள தமிழர்கள் ஆகிய நாங்கள் தமிழர் ஒருவரை முதலமைச்சராக கொண்டு வரவேண்டும். என கங்கணம் கட்டியநிலையில் தமிழ்த் தலைமைகளுக்குள் நடைமுறை ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ கட்சிகளுக்குள் மத்தியில் முரண்பாடுகள் ஏற்பட்டு ஒருசில கட்சிகள் பழைய கோபத்தை தனிபர்பதற்காக கிழக்கு மாகாணத்தில் பிரிந்து தேர்தலில் போட்டியிடுவார்களேயானால் அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஒரு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதி இல்லாமல் போனது போல கிழக்கு மாகாணத்திலும் தமிழ் முதலமைச்சர் ஒருவர் இல்லாமல் போகும் ஆபத்து உருவாகும்.

இந்த ஜதார்த்தமான சூழ்நிலையை உணர்ந்து எமது தலைமைகள் வரட்டுக் கௌரவம் பாராது கிழக்கு மாகாணத்தில் தேர்தல் கூட்டேதும் ஏற்படக்கூடியவாறு செயல்திட்டங்களை முன்வைக்குமாறு அறைகூவல் விடுக்கின்றேன்.

இக்கருத்துக்கள் மறுதழிக்கும் பட்சத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்கட்சிகளை ஒன்று திரட்டுவதற்காக பாரியதொரு விழப்பு கவனயீர்ப்பை நடாத்தி தமிழர் ஒருவரை முதலமைச்சராக கொண்டுவருவதற்கு அணிதிரளுமாறு அழைக்கின்றோம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]