கிழக்கு மாகாணத்திலிருந்து 30 முறைப்பாடுகள்

முறைப்பாடுகள்

கிழக்கு மாகாணத்திலிருந்து 30 முறைப்பாடுகள்

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தொடர்பாக இதுவரை 307 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன்; கிழக்கு மாகாணத்திலிருந்து 30 முறைப்பாடுகள பதிவாகியுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) தேசிய அமைப்பாளர் எம். மனாஸ்.மக்கீ தெரிவித்தார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நேற்று (05) மட்டக்களப்பு வைஎம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. பயிற்சி நிறைவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

முறைப்பாடுகள் முறைப்பாடுகள்

அவர் தொடர்நது கருத்து தெரிவிக்கையில் – நாட்டில் பல பாகங்களிலும் தேர்தல்கள் முறைப்பாடுகள் பதிவாகியுள்ள போதிலும் அம்பாறை மாவட்டத்திலிருந்து அதிகமான முறைப்பாடுகள் வந்துள்ளன.

தேர்தல் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டு பிரசார நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது முதல் அம்பாறை மாவட் கல்முறை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை காணப்பட்ட போது கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவனர் வந்துஅனைத்து கட்சி வேட்பாளர்களை ஓரிடத்துக்கு கொண்டுவந்து அனைவரும் தேர்தலில் போட்டியிடும் உரிமை உள்ளது தொடர்பாக விளக்கத்தினை வழங்கியிருந்தோம்.

தேர்தல் அன்மித்துக் கொண்டிருக்கும் இந்த காலப்பகுதியில் அக்கரைப்பற்று பொத்துவில் ஆகிய பிரதேசத்தில தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க கூடிய நிலமை காணப்படுகிறது.

அக்கரைப்பற்று, பொத்துவில், ஏறாவூர்ப் பிரதேசங்களிலிருந்து தினந்தேமாறும் சட்டவிரோத பிரச்சினை, வாக்களிப்பதற்கு இலஞ்சம் வழங்குதல் போன்ற நிலமை அதிகரிக்கும் நிலமை காணப்படுகிறது.

தேர்தல் முடியும்வரை அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு கூடுதல் அவதானத்தை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ்மா அதிபருக்கும் ஆலோசனையை முன்வைக் உள்ளோம்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]