கிழக்கு மாகாணசபை மூலம் வழங்கப்பட்ட தொழில்வாய்ப்புகள் வெளியிட முடியுமா? வியாழேந்திரன் சவால்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதை இனவாதம் பேசுவதாக கூறும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபை மூலம் வழங்கப்பட்ட தொழில்வாய்ப்புகள் மற்றும் அபிவிவிருத்தி தொடர்பாக தகவல்களை நேரடியாக வெளியிட முடியுமா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் (Viyalenthiran) சவால் விடுத்துள்ளார்.கிழக்கு மாகாணசபை

நாங்கள் இனவாதம் பேசுகிறோம் ஆனால் எம்மை விமர்சிப்பவர்கள் இனவாத்தை செயற்படுத்துகின்றீர்கள். இது தொடர்பாக நாங்கள் பேசுவதற்கு ஆரம்பித்தால் வேறு பிரச்சினைகள் உருவாகும் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு  வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடம் தொடர்பாக கோறளைப் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரி கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபை முன்றலில் இன்று (13) பதன்கிழமை ஆர்ப்;பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – வாழைச்சேனை – கறுவாக்கேணி முச்சரவண்டி சங்கத்தினர் தங்களது வாழ்வாதரத்துக்காக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளும் போது பல நாட்கள் தங்களது அன்றாட வருமாத்தை இழந்துள்ளார்கள்.

இந்த நிலையில் கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தொடர்ச்சியாக பல பேசப்பட்டுவரும் விடயம் இந்த பகுதியில் உள்ள 8 முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் ஒன்று மாத்திரமே தமிழருக்குரியது.

இறுதியாக நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலக செயலாளர், பிரதேச சபைச் செயலாளர் எல்லோரும் மத்தியில் எட்டப்பட்ட ஏகமனதான தீர்மானத்தினை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

குறித்த முச்சக்கரவண்டி சாரதிகள் கடந்த மாதம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் அவர்கைள சந்தித்து தமது பிரச்சினைகளை முன்வைத்த போது. இரண்டு வாரங்களில் தீர்வு வழங்குவதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்று 23 நாட்களைக் கடந்த நிலையில் எந்தவித தீர்வும் பெற்றுக்கொடுக்கவில்லை. இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர்  கே.சித்திரவேல் ஐயாவிடம் அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு அறிவிக்க வில்லை என உள்ளுராட்சி உதவி ஆணையாளர்  கூறுகிறார் இது எவ்வளவு ஏமாற்று வேலை.

உள்ளுராட்சி மன்றங்கள் முதலமைச்சரின் அமைச்சின் கீழ் உள்ளன இந்த பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை வழங்கியிருக்க முடியும். கடந்த சனிக்கிழமை நாசிவன்தீவில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது குறித்த முச்சக்கரவண்டி சாரதிகள் முதலமைச்சரைச் சந்தித்து பேசியவேளை இன்னும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

அபிவிருத்திக் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அரசியல் பிரதிநிதிகள் இணைந்து முடிவுகள் எடுக்கின்றார்கள். அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த விடாமல் கால அவகாசத்தை கொண்டு நீடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]