கிழக்கு கடற்படைத் தளபதியை சந்தித்தார் அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரி

கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதியை சந்தித்து அமெரிக்க தூதரக அதிகாரி பேசியுள்ளார்.

அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான கெல்லி பில்லிங்ஸ்லி மற்றும் கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் நிமால் சரத்சேன ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த, பரஸ்பரம் அக்கறையுள்ள பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.