கிழக்கு ஆளுநரின் காணி அபகரிப்பு உடனடியாக ஆராயப்பட வேண்டும்- ஞா.ஸ்ரீநேசன்

தற்போது கிழக்கு மாகாண ஆளுனராக இருக்கின்ற ஹிஸ்புல்லா வட,கிழக்கு மாகாணங்களில் அதிகளவான காணிகளை சில கம்பனிகளின் பெயரிலும் நபர்களின் பெயரிலும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அனைத்து காணிகளினதும் விபரங்கள் ஆராயப்பட்டு உடனடியாக விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பு – மாமாங்கத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து வெளியிட்டார்;.

அவர் தொடரந்து கருத்து தெரிவிக்கையில் – கிழக்கு ஆளுனரின் இப்படியான செயற்பாடுகள் பல சந்தேகங்களை எமக்கு எழுப்பி இருக்கின்றது. மன்னாரிலும், வெருகல் துறை ராமர் தீவு, புல்லுமலை, உட்பட பல காணிகள் குறிப்பிட்ட அரசியல் வாதி கொள்வனவு செய்து வைத்திருக்கின்றார் என்றால் இது ஆராயப்படவேண்டிய விடயமாக இருக்கின்றது.

சாதாரண முஸ்லிம் மக்கள் வீடுகளை அமைப்பதற்காக அவர்கள் பரப்புக்கணக்கில் காணிகளை வாங்கி குடியமர்ந்ததைப் பற்றி நாங்கள் கூறவில்லை ஆனால் அரசியல்வாதிகள் அளவுக்கு அதிகமாக காணிகளைக் இவ்வாறு கொள்வனது செய்து வைத்திருப்பதென்பது எதிர்காலத்தில் என்ன நோக்கத்திற்காக செய்யப்படுகின்றது என்ற எண்ணம் எமக்கு இருக்கின்றது.

தேவைகளுக்கு பயன்படுத்தாமல் அளவுக்கு அதிகமான காணிகள் வைத்திருகின்றமை சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அதேபோன்று மட்டக்களப்பு பல்கலைக்கழகம் பற்றி கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஆட்சியில் டளஸ் அழகபெரும அவர்கள் அமைச்சராக இருக்கின்ற பொழுது அவருடன் ஒப்பந்த செய்துதான் அந்த காணி பெறப்பட்டிருக்கின்றது.

எனவே சிலரது அரசியல் தேவைகளுக்காக சிலரது ஆதரவுகளை பெறுவதற்கு ஒரு விடயம் எதிர்காலத்தில் எவ்வாறு நடக்கப்போகின்றது என்பதைப் பற்றி ஆராயாமல் காணிக் கொடுப்பனவுகள் அல்லது காணிக் கையளிப்புகள் நடைபெற்றுக்கொண்டிருகின்றது.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் பற்றி பல கேள்விகள் பலரது மத்தியில் எழுந்துகொண்டிருக்கின்றது இந்த பல்கலைகழகத்தில் பல பீடங்கள் கொண்டுவருவதாக கூறுகின்றார்கள்

ஆனால் அரபு நாடுக்களில் இருந்து வருகின்றவர்களினால் அடிப்படைவதிகலூடாக மூளைச்சலவை செய்யக்கூடியவிதத்தில் இந்த நாட்டில் அடிப்படை வாதத்தை உருவாக்கக்கூடிய விதத்திலும் இந்த பல்கலைக்கழகம் அமைந்து விடுமோ என்ற அச்சம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

எனவே நாங்கள் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது என விரும்புகின்றோம் எனறார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]