கிழக்குப் பல்கைலக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்குப் பல்கைலக்கழக மாணவர்கள்

கிழக்குப் பல்கைலக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்றி பதிவு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை கண்டித்து சைட்டத்தை உடனடியாக மூடிவிட வேண்டும் எனக் கோரி கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் இன்று (10) புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் தமது கோரிக்கைகளடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் விடுதி பகுதியிலிருந்து புறப்பட்டு ஊர்வலமாக வந்து பிரதான வீதியோரம் நின்று தமது கோஷங்களை எழுப்பினர்.

ஆட்சியாளர்களே பெயரை மாற்றத்தை சைட்டத்தை பதிவு செய்யும் சூழ்ச்சியை உடனடியாக நிறுத்து, வாக்களித்த ஜனநாயகம் இதுதானா?, பெற்றோர்களை அழித்து சைட்டத்தைப் பாதுகாப்பதா?, போலித் தீர்ப்பு வேண்டாம் சைட்டத்தை ரத்துச் செய்?, வாக்களித்த ஜனநாயகம் இதுதானா? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கு மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில் – மருத்துவ படிப்பபை பணத்துக்கு விற்பனை செய்தால் பணம் படைத்தவர்களுக்க வழங்கும் சலுகையாகவே அமையும். ஏழைகளைக் காப்பற்றுவதற்கும் எமது பெற்றோர் மாணவர்களை காப்பாற்றுவதற்கும் சைட்டத்தை உடனடியாக தடை செய்யுங்கள் என்றனர்.

கிழக்குப் பல்கைலக்கழக மாணவர்கள் கிழக்குப் பல்கைலக்கழக மாணவர்கள் கிழக்குப் பல்கைலக்கழக மாணவர்கள் கிழக்குப் பல்கைலக்கழக மாணவர்கள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]