கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

    கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்

இலவச கல்விக்கான போராட்டத்தில் ஈடுபட்டத்திற்காக சிறைவைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவ செயற்பாட்டாளர்களான ஜினரத்தன தேரர் மற்றும் சனத் பண்டார ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (13) புதன்கிழமை பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு-வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்

பல்கலைக்கழக விடுதிபகுதியிலிருந்து சுலோகங்கள் மற்றும் பதாதைகளுடன் பிரதான வீதிக்கு வந்த இம்மாணவர்கள் தமது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

எமது மாணவர் சங்கப்பிரதிநிதிகள் சுயநலத்திற்காக அன்றி மாணவர்களது உரிமைகள் மற்றும் நலன்களுக்காகவே போராடியானார்கள். அவர்கள் கோடிக்கணக்கான ரூபா சொத்துக்களை கொள்ளையிடவில்லை.

2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் தமது சொத்து விபரங்களை வெளியிட முடியாது ஒழித்திருக்கவுமில்லை.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்கள்கூட பல கோடி ரூபா கொள்ளையிட்டு தற்போது பிணையில் வெளிவந்து சாதாரணமாக நடமாடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில் மாணவர்களது உரிமைகளுக்காக போராடிய எமது தலைவர்களை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பது எந்தவகையில் நியாயமானது என அவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]