கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களுக்கான பரீட்சை 29 ல் ஆரம்பம்!

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானம், விவசாயம் மற்றும் கலை கலாசார பீட மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது என கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம் தெரிவித்தார்.

பல்கலைக் கழக விடுதி வசதியுள்ள மாணவர்கள் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுதிகளுக்கு திரும்பலாம் எனவும் கூறினார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலை கலாசார பீடம் 2016-2017 முதலாம் வருடம் 2ம் தவணை.

விஞ்ஞான பீடம் 2013-2014 மூன்றாம் வருடம் 2ம் தவணை.

இரசாயணவியல் 2011-2012 விசேட நான்காம் வருடம் 1ம் தவணை

விவசாய பீடம் 2013-2014 நான்காம் வருடம் 1ம் தவணை

ஆகிய பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே எதிர்வரும் 29ஆம் திகதி பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கிழக்குப் பல்கலைக்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]