கிழக்குப் பல்கலைக் கழக பட்டமளிப்பு

கிழக்குப் பல்கலைக் கழக பட்டமளிப்பு

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொது பட்டமளிப்பு சனிக்கிழமை (15) வந்தாறுமூலையிலுள்ள நல்லையா மண்டபத்தில் நான்கு அமர்வுகளாக நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக் கழக வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து ( (Taranjit Singh Sandu), உப உவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம், வளாகங்களின் முதல்வர்கள், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மெய்யியல் விஞ்ஞானம், மெய்யியல் கலை, கல்வி, வணிக முகாமைத்துவம், பொருளாதார அபிவிருத்தி, ஆகிய துறைகளில் முதுமானி, பட்ட மேற்படிப்பு டிப்ளோமா, சௌக்கிய பராமரிப்ப விஞ்ஞானங்கள், பிரயோக விஞ்ஞான, விவசாயம், கலை கலாசாரம், வணிக முகாமைத்துவம், தொடர்பாடல் மற்றும் வியாபார கற்கைகள்;, சுவாமி விபுலானந்தா அழிகியற் கற்கை நிறுவகத்தில் சங்கீதம், நடனம், கற்புல தொடர்பாடல் கலை, நாடகமும் அரங்கியலும், திருகோணமலை வளாகத்தில் மொழித்துறை, தொடர்பாடல், விஞ்ஞான முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த 927 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

முதலாவது அமர்வில் 209 பேருக்கும், இரண்டாவது அமர்வில் 217 பேருக்கும், மூன்றாவது அமர்வில் 251 பேருக்கும் நான்காவது அமர்வில் 250 பேருக்கும் பட்டமளிப்பு நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக் கழக கிழக்குப் பல்கலைக் கழக கிழக்குப் பல்கலைக் கழக கிழக்குப் பல்கலைக் கழக கிழக்குப் பல்கலைக் கழக கிழக்குப் பல்கலைக் கழக கிழக்குப் பல்கலைக் கழக கிழக்குப் பல்கலைக் கழக கிழக்குப் பல்கலைக் கழக கிழக்குப் பல்கலைக் கழக கிழக்குப் பல்கலைக் கழக கிழக்குப் பல்கலைக் கழக

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]