கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக் கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா புதிய வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா தலைமையில் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெற்றது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு, வந்தாறுமூலை மற்றும் திருகோணமலை ஆகிய வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 852 பேர் இதன்போது பட்டம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய நேர அட்டவணைப்படி நான்கு அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு இடம்பெற்றது.

கலைகலாசார பீடம், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம், சித்த மருத்துவ கற்கைகள் பிரிவு, வணிக முகாமைத்துவ பீடம், விவசாய பீடம், தொடர்பாடல் மற்றும் வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், சுவாமி விபுலாநந்தா அழகிய கற்கைகள் நிறுவனம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர்களுக்கே பட்டமளிப்பு இடம்பெற்றுள்ளது.

அதி கூடிய அளவாக கலை கலாசாரத்துறையில் கற்ற 450 பேரும், வைத்தியத் துறையில் 50 பேரும், விவசாயத் துறையில் 11 பேரும் சித்த மருத்துவத் துறையில் 10 பேரும் பட்டம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]