கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு தொடர்பான விழிப்பூட்டலும், கலந்துரையாடலும்

கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு தொடர்பான விழிப்பூட்டலும், கலந்துரையாடலும்

நீரிழிவு

உலக நீரிழிவு தினத்தையொட்டி கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் ஏற்பாட்டில் விசேட வைத்திய நிபுணர்கள் பொதுமக்களுக்கு நீரிழிவு தொடர்பான விழிப்பூட்டலும், கலந்துரையாடலும் நேற்று (21) செவ்வாயக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

நீரிழிவு

கிழக்குப் பல்கலைக் கழகதின் மட்டக்களப்பில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழிப்பூட்டல் நிகழ்வில் நீரிழிவும் சமூகமும் எனும் தலைப்பில் , குடும்பநல வைத்திய நிபுணர் வைத்தியர் கு.அருளானந்தம், கர்ப்பமும் சர்க்கரையும் ஐம் தலைப்பில் மகப்பேற்றியல் மற்றும் பெண்ணியல் வைத்திய நிபுணர் மா.திருக்குமார் , உணவே ஒளடதமாக எனும் தலைப்பில் சௌக்கிய விஞ்ஞான பீட வைத்திய நிபுணர் வைத்தியர் கு.த.சுந்தரேசன் நீரிழிவும் ஜதீகமும் ஜயந் தெளிதலும் எனும் தலைப்புக்களில் விசேட பொது வைத்திய நிபுணர் ம.உமாகாந் ஆகிய வைத்திய நிபுணர்கள் விரிவுரைகளை வழங்கினார்கள்.

நீரிழிவு

நீரிழிவுநோயின் தாக்கம் , நோயின் தாக்கத்தை கட்டுபடுத்துவதற்கான வழிமுறைகள் .உணவு பழக்கவழக்கம் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது இந்நிகழ்வில் வைத்தியர்கள் , சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட மாணவர்கள் , பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நீரிழிவு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]