கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சகல கல்விசார் நடவடிக்கைகளும் திங்கட்கிழமை 23.04.2018 முதற்கொண்டு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.

இதன்படி பல்கலைக்கழக அனைத்து பீடங்களையும் சேர்ந்த சகல வருட மாணவர்களும் வழமை போன்று தமது கல்வி நடவடிக்கைகளில் பங்குபற்றுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகம், திருகோணமலை வளாகம், மட்டக்களப்பு மருத்துவக் கற்கைகள் பிரிவு, கல்லடி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் ஆகியவற்றிலேயே கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை மாணவர்கள் தங்களது விடுதி இடங்களுக்குத் திரும்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 44 நாட்களாக இடம்பெற்று வந்த பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு நிறைவுக்கு வந்ததை அடுத்து அனைத்துப் பல்கலைக் கழக கல்வி நடவடிக்கைகளும் மீளத் துவங்குகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]