கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கை 03.10.2017 ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ( Eastern University Sri Lanka ) சகல பீடங்களினதும் முதலாம், இரண்டாம், மூன்றாம்; வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 03.10.2017, செவ்வாய்கிழமை ஆரம்பமாகும் என கிழக்குப் பல்கலைக் கழக பதிவாளர் ஏ எல் ஜௌபர் ஸாதிக் தெரிவித்துள்ளார்.

விடுதி வசதிகளுக்கு தகுதியான அனைத்து மாணவர்களும் எதிர்வரும் 02.10.2017, திங்கட்கிழமை பி.ப 06.00 மணிக்கு முன்னர் தத்தமது விடுதிகளுக்கு சமூகம் தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் தமக்கு விடுதி வசதி ஏற்ப்படுத்தி தருமாறு கோரி ஆகஸ்ட் 08ஆந் திகதி முதல் வந்தாறுமூலை வளாக நிருவாக கட்டடத்தை முற்றுகையிட்டு சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பல்கலைக் கழக நிருவாக நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கிழக்குப் பலக்லைக் கழகத்தில பேரவை நிலமை தொடர்பாக ஆராய்ந்து அகஸ்ட் 17ஆந் திகதி முதல் திருகோணமலை வளாகம் தவிர்ந்த வந்தாறுமூலை வளாகம் மற்றும் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் ஆகியவற்றை மூடுவதற்கு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]