கிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி

கிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி வியாழக்கிழமை 24.05.2018 கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் முன்னரங்கில் இடம்பெற்றது.

இங்கு தமது நுண்கலைத் திறனை வெளிப்டுத்தும் வண்ணம் மாணவர்களின் ஆக்கபூர்வ நெய்தல் செயற்பாடுகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

கண்கவரும் இந்த நெய்தற் கலைகள் பாரம்பரியத்திற்கு உயிரூட்டுவதாய் அமைந்திருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழக கிழக்குப் பல்கலைக்கழக கிழக்குப் பல்கலைக்கழக கிழக்குப் பல்கலைக்கழக கிழக்குப் பல்கலைக்கழக கிழக்குப் பல்கலைக்கழக கிழக்குப் பல்கலைக்கழக

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெயசங்கர், உட்பட விரிவுரையாளர்களும் இன்னும் பல அதிதிகளும் ‪அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]