கிழக்குப்பல்கலைக் கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில்

கிழக்குப்பல்கலைக் கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில்.

கிழக்குப்பல்கலைக் கழக

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர, மற்றும் பல்கலைக்கழக மத குருமார்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் டெம்பிட்டிய சுகணானந்த தேரர் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யயுமாறு கோரி கிழக்குப்பல்கலைக் கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப்பல்கலைக் கழக

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாக முன்றலில் இன்று (13) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கிழக்குப்பல்கலைக் கழக

மாணவர்கள் தமது கோரிக்கைகளடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் விடுதி பகுதியிலிருந்து புறப்பட்டு பிரதான வீதியோரம் நின்று தமது கோஷங்களை எழுப்பினர். அதனையடுத்து நிருவாகக் கட்டடத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

கிழக்குப்பல்கலைக் கழக

வெறித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம், வாக்களித்த ஜனநாயகம் இதுதானா?, சைட்டத்தை இல்லாமல் செய், லஹிரு வீரசேகர, மற்றும் டெம்பிட்டிய சுகணானந்த தேரர் ஆகியோரை விடுதலை செய் போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப்பல்கலைக் கழக

இங்கு கருத்து தெரிவித்த மாணவர்கள் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக போராடும் எமது தலைவர்களைக் கைதுசெய்வதாலோ ஆர்பாட்டங்களை அடகுவதனாலே மாணவர் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியாது இந்த பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி மூடப்பட வேண்டும். இதுவரை நாங்கள் போராடிக்கொண்டு இருப்போம் என்றனர்.

கிழக்குப்பல்கலைக் கழக

நீதிமன்ற உத்தரவினை மீறி, சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கொள்ளுப்பிட்டியில்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமைக்காக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர, மற்றும் பல்கலைக்கழக மத குருமார்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் டெம்பிட்டிய சுகணானந்த தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கிழக்குப்பல்கலைக் கழக

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]