கிழக்குத் மாகாண சபைத் தேர்தலை கூட்டமைப்பு தனித்து நின்று எதிர்கொள்ளும்

கிழக்குத் மாகாண சபைத் தேர்தலை கூட்டமைப்பு தனித்து நின்று எதிர்கொள்ளும்

கிழக்குத் மாகாண
BBC

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை அரசு கைவிட்டால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை தனித்துநின்று எதிர்கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விரைவில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவது நல்லது என்றே நினைக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான குழப்பம் தோன்றியுள்ளபோதும் திருத்தம் கைவிடப்பட்டுத் தேர்தல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டால் எதிர்வரும் டிசெம்பர் 9ஆம் திகதி தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகின்றது.

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் கைவிடப்பட்டால் கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் டிசெம்பர் 9ஆம் திகதி நடத்தப்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.

அதற்குத் தேர்தல்கள் திணைக்களம் தயாராக இருக்கின்றது என்று தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாண சபை தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டாட்சியில் உள்ளது.

எனவே, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று கேட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]