கிழக்கில் தமிழ் அரசியல் தலைமைகள் இனவாத்தைத் தூண்டி விடுகின்றனர் : உதுமாலெப்பை

கிழக்கு மாகாணத்தில் பௌத்த மதத் தலைவர்கள் சட்டத்தை கையில் எடுத்து தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களிடையே இன பேதங்களை ஏற்படுத்த திட்டமிட்ட சதிகள், பின்னணியில் சில இனவாத அரசியல்வாதிகள் உள்ளதால் முஸ்லிம் மக்கள் விழிப்பாக செயற்படவேண்டும் என்று கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கடந்த 30 வருடகால கொடூர யுத்தத்தால் கிழக்கு மாகாணத்தில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் மூன்று சமூகங்கள் மத்தியிலும் உள்ளன. இவ்வாரான பிரச்சினைகள் பேச்சுகள் ஊடாக தீர்வுகாண முயற்சிக்காமல் இனவாதச் செயற்பாடுகளை முன்னெடுத்தவரும் சில பௌத்த மதத் தலைவர்களை சட்டத்தை கையில் எடுக்கவைத்து கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் இன பேதங்களை ஏற்படுத்துவதற்கான சதித்திட்டங்கள் திட்டமிடப்பட்டு இனவாதத்தின் ஊடாக தங்களின் அரசியல் இருப்பிடங்களை உறுதிப்படுத்த முயற்சிக்கும் சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகளும் இணைந்து செயல்படுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் மூன்று சமூகங்களினிடையே உள்ள பிரச்சினைகளை அரசியல் தலைமைகள் ஒன்றாக அமர்ந்து தீர்வுகளைக் காணாமல் இனவாதத்தை பரப்புகின்றனர்.

வட்டமடு மேச்சல்தரை, விவசாயக் காணிகள் தொடர்பான பிரச்சினைகளில் தமிழ் முஸ்லிம் விவசாயிகள், கால் நடை உற்பத்தியாளர்கள் உள்ளனர். இரண்டு சமூகங்களின் அரசியல் தலைமைகள் இப்பிரச்சினைக்கு தீர்வுகளைக் காணாமல் வெளிமாகாணங்களில் இருந்து இனவாத தீயை பரப்பும் பௌத்த மதத்தலைவர் ஒருவரை அம்பாறை மாவட்டத்திற்கு கொண்டு வந்து தமிழ் அரசியல் தலைமைகள் இப்பிரச்சினையை வேறு நிலைக்கு மாற்றியுளளனர்.

இறக்காம மாணிக்கமடுவில் முஸ்லிம்களின் பூர்வீகமான காணிகளை பறித்து பௌத்த விகாரை அமைப்பதற்கு இனவாத சில அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும் முயற்சிசெய்த போது தமிழ் தலைமைகள் வேடிக்கை பார்த்து மறைமுக உதவிகளை விடயத்தில் வழங்கியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பகிரங்கமாகவே தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை உருவாக்கி அரச அதிகாரிகளை அவமானப்படுத்திய பௌத்த மதத் தலைவர் மட்டக்களப்பு மாவட்ட மொறாவோட காணிப்பிரச்சினையில் தலையிட்டு முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். இந்த பின்னனியிலிருந்து தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம், தமிழ் உறவுகளை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாடியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]