கிழக்கில் தமிழர்களுக்கு எதிரான காலணித்துவ ஆட்சியா – பூ.பிரசாந்தன்

கிழக்கில் தமிழர்களுக்கு எதிரான காலணித்துவ ஆட்சியா – பூ.பிரசாந்தன்

2015 ஆவணி மாதத்தின் பின்னர் கிழக்கு மாகணத்தில் தமிழர்களுக்கு எதிரான காலணித்துவ ஆட்சியா நடைபெறுகிறது.என கிழக்கு மாகண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொது செயலாளருமான பூ.பிரசாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்:-

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் பணிப்பாளராக பணியாற்றி கடந்த யூலை மாதத்துடன் ஒய்வு பெற்றுச் சென்ற இப்ராலெப்பைக்கு பதிலாக அதே தகுதியுடைய திருமதி கலாரஞ்சினி ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு கடமைகளை பெறுப் பேற்று நிருவாக செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் போது திடிரென மீண்டும் 6 மாத மீள்சேவை இணைப்புடன் ஒய்வு பெற்றுச் சென்ற இப்ராலெப்பை பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது எவ்வகையில் நியாயத் தன்மையானது அல்லது 6மாத காலத்திற்குள் வைத்தியசாலையில் எதாவது புதிய மாற்றத்தினை மேற் கொள்வதற்கான முன்னேற்பாடா?

பணிப்பாளருக்கு தேவையன தகமையில்லாத நிலையில் பற்றாக்குறை காணப்பட்டால் மீள்நியமனம் அல்லது சேவை நீடிப்பு கொடுப்பது நியாயம். ஆனால் தகுதியான ஒருவர் நியமிக்கப்பட்ட பின்னர் மீண்டும் நிருவாகத்தினை சீர்குலைக்கும் செயற்பாடகவே மேற்படி நியமனம் குறித்து மக்கள் கருதுகின்றனர். ஆளும் அரசின் பங்காளிகளாக தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவரும், நாடாளுமன்றத்தில் இருக்க தக்கதாக கிழக்கு மாகணத்தில் தமிழர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு கூட ஆர்ப்பாட்டங்களும்,ஹர்த்தால்களு ம், கடையடைப்புகளும் நடத்தியே தீர்வினைப் பெற்றுக் கொள்ளவேண்டுமானால் பிரதேச அபிவிருத்திக்குழு, மாவட்டஅபிவிருத்திக்குழு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளெல்லாம் தேவைதானா என மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர்.

மக்களின் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆட்களின் எண்ணிக்கையினைக் காட்டுவதற்காக மக்கள் வாக்களிக்க வில்லை.மாற்று சமூகஅரசியல் தலைமைகளின் அரசியல் தலையிட்டால் தான் எல்லாம் நடைபெறுகிறது. என்றால் ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கு அதிகபடியான வாக்குகளை பெற்றுக் கொடுத்துவிட்டு ஆளும் அரசிக்கு முட்டுக் கொடுக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் கையாலாகாத பதவிகளை வைத்துக்கொண்டு வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யாது இருப்பதை விடுத்து பதவிகளை தூக்கிவீசி விட்டு வாருங்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் அரசியல் பயணத்தில் இணைந்து ஜனநாயகப்பாதையில் மக்களுக்கான போரட்டத்தில் இணைந்து தமிழரின் நில,நிதி, நிருவாக இருப்புக்களை வென்றெடுப்பதற்கு முன்வாருங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]